பதிவிறக்கம்
ஃபோட்டோஸ்கேப் - PhotoScape
சமீபத்தியப் பதிப்பு 3.7
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

ஃபோட்டோஸ்கேப் - PhotoScape புதிய பதிப்பு3.7

ஃபோட்டோஸ்கேப் - PhotoScape
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

ஃபோட்டோஸ்கேப் - PhotoScape 3.7
அடோபி ஃபோட்டோஷாப் போன்ற உயர்வசதிகள் கொண்ட தொழில்முறை ஓவியச் செயலி மென்பொருளுக்கு ஒரு எளிய மாற்றாக ஃபோட்டோ ஸ்கேப் இருக்கிறது. பொழுதுபோக்காகப் பயன்படுத்துவோர் தங்கள் கணினியில் படத்தொகுப்புகளை உருவாக்கவும், ஒழுங்குபடுத்தவும் உதவும் மிகச் சரியான மென்பொருள் ஆகும்.

இது பொழுதுபோக்காகப் பயன்படுத்துவோரருக்கு உடனே கற்றுக் கொள்ளக்கூடிய பல இலகுவான எளிய உபகரணங்களைத் தருகிறது. ஃபோட்டோ ஷாப்பின் விலைச்சுமையைச் சுமக்க முடியாதவர்களுக்கு, அது வழங்கும் அனைத்து வகை வடிகட்டிகளையும் கொண்ட சிறந்த மாற்றாக ஃபோட்டோஸ்கேப் இருக்கிறது.

ஃபோட்டோஸ்கேப் சிக்கலான உபகரணமோ அல்லது உபயோகிக்கக் கடினமானதோ அல்ல. அது எளிய. இலகுவான, நன்கு வடிவமைக்கப்பட்ட இடைமுகம் கொண்ட, போதுமான அளவு உபகரணங்கள் மற்றும் வசதிகள் கொண்ட மென்பொருளாக, தொழில்முறை பயனாளிகள் கூட மகிழ்வுடன் உபயோகிக்கும் விதத்தில் இருப்பதில் இருப்பதில் சுயபெருமை கொண்டிருக்கிறது.

மென்பொருள் விமர்சனம்

புகைப்படங்களைக் கண்டறிந்து, அடுக்கி, திருத்தங்கள் செய்கிறது.

ஃபோட்டோ ஸ்கேப் இலகுவான, எளிய, அனைத்தும் உள்ளடக்கிய ஓவியச் செயல் பயன்பாட்டு மென்பொருள். இது பலம் மிகுந்த அடோபி ஃபோட்டோ ஷாப்பிற்கு சரியான போட்டியாக, தேவையான உபகரணங்களுடன் வருகிறது. மேலும் இது இலவசப் பதிவிறக்க மென்பொருளாகும். ஃபோட்டோ ஸ்கேப்பின் உதவியுடன், அடோபி ஃபோட்டோ ஷாப் போன்ற பிரபல மென்பொருட்களின் வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். உங்கள் படங்களின் அளவுகளை மாற்றலாம், சிறு மாற்றங்களைச் செய்யலாம். எண்ணிம புகைப்பட கருவிகளில் இருந்து பதிவிறக்கப்பட்டப் புகைப்படங்கள், வரைவுகருவியில் உள்ளிடப்பட்டப் புகைப்படங்கள் போன்ற அனைத்து வகை புகைப்படங்களையும் மாற்றலாம்.

ஃபோட்டோ ஸ்கோப் விரைவில் பதிவிறக்கி எளிதில் நிறுவி, அமைத்துக் கொள்ளக் கூடிய மென்பொருளாகும். ஃபோட்டோ ஸ்கேப் மைக்ரோசாஃப்டின் சாளர இயங்கு தளத்திற்கு மட்டுமே இப்பொழுது கிடைக்கிறது. இதை நிறுவிய உடனே விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவில் இது கிடைக்கும்.

ஃபோட்டோ ஸ்கேப்பின் முக்கிய வசதிகள் – கலப்பான், தொகுப்பான், தொகுதித் தொகுப்பு, பக்க உருவாக்கம், இயங்குபடம், பார்வையிடும் வசதி, ஜிஐஎஃப்(வரைகலை மாற்று வடிவம்) மற்றும் அச்சிடுதல் போன்றவை ஆகும். இது ஃபோட்டோ ஷாப் போல சிக்கலானதாக இல்லாவிட்டாலும், புதிய பயனாளிகளுக்கு உபயோகமுள்ளவாறு கீழே விரித்துரைக்கப்பட்டுள்ளன.

தொகுதித் தொகுப்பு : பல பிம்பங்களில் ஒரே சமயத்தில், ஒரே மாதிரியான தொகுப்பு வேலைகளை, ஒரே தொகுதியாக்கிச் செய்வதே தொகுதித் தொகுப்பு ஆகும். உதாரணமாக அனைத்துப் புகைப்படங்களிலும் உள்ள நீர்க் குறியீடுகளை அழித்தல் அல்லது சேர்த்தல் போன்ற வேலைகளை நிறைய புகைப்படங்களுக்குச் செய்ய இதை உபயோகிக்கலாம்.

தொகுப்பான் : உங்கள் பிம்பங்களுக்கு பல மாற்றங்களையும், மேம்பாடுகளையும் செய்ய இது உதவுகிறது. ஒரு புகைப்படத்தில் இம்மென்பொருளின் அனைத்துத் திறன்களையும் உபயோகப்படுத்தி பல மாற்றங்கள் செய்து ஆராய இந்தப் பொத்தான் மீது சொடுக்கிப் பாருங்கள்

ஜிஐஎஃப்(வரைகலை மாற்று வடிவம்):, அசைப்பட கோப்புகளின் சிறுகுறிபடம் போன்ற ஜிஐஎஃப் வடிவ இயங்குபட பிம்பங்களை உருவாக்க ஜிஐஎஃப் நிரல் பயன்படுகிறது. உங்களுக்கு ஒரு அசைபடங்கள் மிகநிறைந்த இணையதளம் இருந்தால் ஜிஐஎஃப் சிறு முன்னோட்டம் வழங்குவதற்கு மிகக் கச்சிதமான வழியாகும்.

பக்க உருவாக்கம் பக்க உருவாக்க உபகரணம் பல படங்களைக் காட்டக்கூடிய நழுவு திரைக்காட்சி போன்ற வசதி கொண்ட இணையப்பக்கங்கள், வலைப்பக்கங்கள் ஆகிய தொகுப்புகளை உருவாக்கப் பயன்படுகிறது.

கலப்பான் : பக்க உருவாக்க உபகரணத்தைப் போலவே இதுவும் உங்கள் பிம்பங்களில் சிறப்பு அமைப்புகளைச் சேர்க்க உதவும் பல வசதிகளையும் செயல்களையும் கொண்ட உபகரணம் ஆகும். இதன் மூலம் உங்கள் பிம்பங்களுக்கு பல சிறப்புத் தாக்கங்களைச் சேர்த்து சிறந்த படத்தொகுப்புகளை உருவாக்கலாம்.

அச்சிடுதல் : அச்சிடும் வசதி, அனைத்து பணி முடிக்கப்பட்ட பிம்பங்களையும் அச்சிட உதவுகிறது. வர்ணங்களை மாற்ற, சிறு அளவு மாற்றங்கள் செய்ய, பிம்பங்களை தரமுயர்த்த, சரியான இடைவெளிகள் கொடுக்க, அழகிய கரைகளைக் கொடுக்க என, பல அம்சத் தேர்வு உதவிகள் பிம்ப அச்சமைப்பை தேவைக்கேற்ப மாற்றி மேம்படுத்தி சிறந்த இறுதிமுடிவைக் கொடுக்கிறது.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Photo Pos Pro
Photo Pos Pro
அடோபி ஃபோட்டோஷாப் - Adobe Photoshop
அடோபி ஃபோட்டோஷாப் - Adobe Photoshop
Gimp
Gimp
Gimpshop
Gimpshop
விளக்கம் வரைகலை திருத்த மென்பொருள். ஒரு வரைகலைத் திருத்த மென்பொருள். புகைப்படத் திருத்தம், வரைதல் மற்றும் ஓவிய மென்பொருள். பதிவிறக்கம் செய்க Gimpshop, பதிப்பு 2.8
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 3 76 1 0
விலை $ 0 $ 999 $ 0 $ 0
கோப்பின் அளவு 61.85 MB 1250.00 MB 86.10 MB 2156 KB
Download
Download
Download
Download


ஃபோட்டோஸ்கேப் - PhotoScape மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு ஃபோட்டோஸ்கேப் - PhotoScape போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். ஃபோட்டோஸ்கேப் - PhotoScape மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

திரைக்காட்சிகளைப் பிடித்து திருத்தங்கள் செய்ய உதவுகிறது.
WinSnap பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
உன்னத எண்ணிமப் பிம்பச் செயலி.
IrfanView பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
எண்ணிமப் புகைப்படத்திற்காகப் பயன்படுத்தும் ஒரு பிம்ப உருவாக்கி.
Adobe Photoshop Lightroom பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
உலகின் மொத்தப் புவியியல் தகவல்கள்.
கூகுள் எர்த் - Google Earth பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • ஒரு வாரம் முழுதும் சோதித்தாலும் முடியாத அளவு பல சிறப்பு விளைவுகளையும், வடிப்பிகளையும் கொண்டது.
  • பொழுதுபோக்கு ஆர்வலர்களுக்கும் புகைப்படத் திருத்தத்தை ஒரு தொழிலாக மாற்றவல்லது.
  • இத்தனை தரமுடைய இலவச மென்பொருட்கள் அதிகமில்லை.
  • இதில் இலவசமில்லாத ஃபோட்டோ ஷாப் போன்ற மென்பொருள்கள் அளிக்கும் அம்ச வரிசைகளோ, ஆழமோ இல்லை
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:6 (Users14696)
தரவரிசை எண் வரைகலை வடிவமைப்பு:2
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:20.37 MB
பதிப்பு:3.7
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:11/9/2014
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:Mooii
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):16
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):1,824,957

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : Mooii
Mooii நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1

பிரபல மென்பொருட்கள்:
1. ஃபோட்டோஸ்கேப் - PhotoScape
1 அனைத்து மென்பொருட்களையும் காண்க